உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்

தெக்கலுார் அரசுப்பள்ளி மாணவி பேச்சுப்போட்டியில் முதலிடம்

திருப்பூர்: மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில், பேச்சுப் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில், தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிரக் ஷா, முதல் பரிசு பெற்றார். ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ, இரண்டாம் பரிசு, காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிவர்ஷனி, மூன்றாம் பரிசு பெற்றனர்.பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா, முதலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீசக்தி ஆகியோர் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவி மெர்லின், முதல் பரிசு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மாணவி ரிச்சிகாஸ்ரீ, இரண்டாம் பரிசு, அவிநாசி அரசு கலைக்கல்லுாரி மாணவன் தரணிதரன், மூன்றாம் பரிசு பெற்றனர்.முதல் பரிசு, 5,000 ரூபாய்; இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்; மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. போட்டிகளை, தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் இளங்கோ, ஒருங்கிணைத்து நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை