உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காளியை வழிபட்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை

காளியை வழிபட்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை

பல்லடம்; பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வன பத்ரகாளி பீடம் உள்ளது. இக்கோவிலில், ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. நிகும்பலா யாகத்தை துவக்கி வைத்து அதர்வன பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் பேசியதாவது: சகல ஷேமத்தையும் கொடுக்கக்கூடியது நிகும்பலா யாகம். அன்னை மட்டுமே வியாதிகள் வராமல் காப்பாள். மரண பயம், கடன் பிரச்னை, தரித்திரம் போக்குபவள்தான் பிரத்யங்கிரா தேவி. காளியை வழிட்டவர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. காளியை வழிபட்டு பில்லி, சூனியம் என, தவறாக பயன்படுத்தினால், அது அவர்களுக்கே திரும்பி விடும் ஆபத்து உள்ளது. அமாவாசையில் நடக்கும் நிகும்பலா யாகத்துக்கு சக்தி அதிகம். இந்நாளில், 'என்னை தேடி வா; உன்னை நான் நாடி வருவேன்,' என்கிறாள் அம்பாள். இந்நாளில் அம்பாளை தரிசிப்பது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையில் தரிசிப்பது மிகவும் பாக்கியம். வரமிளகாயை தான் நிகும்பலா என்று கூறுவார்கள். மகாலட்சுமி பிறந்த மாதம் ஆடி மாதம் என்பதால்தான், இம்மாதத்துக்கு தனிச்சிறப்புஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகும்பலா யாகத்தை தொடர்ந்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில், பிரத்யங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை