மேலும் செய்திகள்
பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்குங்க
04-Aug-2025
உடுமலை; குடிமங்கலம் நால்ரோட்டில் நிழற்கூரை இல்லாததால், பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காத்திருக்கும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர். உடுமலை - பல்லடம் மற்றும் பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் நால்ரோடு, குடிமங்கலத்தில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு கிராம வழித்தடங்களில் இருந்து வரும் மக்கள், பல்லடம், திருப்பூர், தாராபுரம் செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மேலும், குடிமங்கலத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவையும் அமைந்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நால்ரோட்டில், தாராபுரம் பஸ்கள் நிறுத்தும் பகுதியில், நிழற்கூரை வசதியில்லை. இதனால், அங்குள்ள மரத்தடியில், உடுமலை, தாராபுரம் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது. மழைக்காலங்களில், மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் முதியவர்களும், பெண்களும் அதிகம் பாதிக்கின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே,இப்பிரச்னைக்கு தீர்வாக, நால்ரோட்டில், நிழற்கூரை அமைக்க குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Aug-2025