உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : விடுபட்டோர் தொடர்பு கொள்ளலாம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : விடுபட்டோர் தொடர்பு கொள்ளலாம்

உடுமலை:கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள், களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்கும் வகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த நவ., 29ம் தேதி முதல், கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.களப்பணியாளர்கள், வீடு வீடாகச்சென்று, மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை பெற்று, 'மொபைல் ஆப்'ல் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள், சுயமாகவோ, தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதற்காக களப்பணியாளர்களின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 9578972711, 9976819072, 87541 82264; உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்டோர் 9943331980; குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டோர் 7904880886, மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 7502778558 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை