உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயிரக்கணக்கில் குவியும் பயணியர் அரை கி.மீ., கடந்தாலே உணவகம்

ஆயிரக்கணக்கில் குவியும் பயணியர் அரை கி.மீ., கடந்தாலே உணவகம்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் விட்டு இறங்கும், ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக, முதல் பிளாட்பார்மில் மூன்று, இரண்டாவது பிளாட்பார்மில் நான்கு கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் டீ, காபி, தின்பண்டம் விற்கப்படுகிறது; உணவு பதார்த்தங்கள் இல்லை.திருப்பூர் ஸ்டேஷனை கடந்து கோவை மார்க்கமாக, 32 ரயில்களும், ஈரோடு மார்க்கமாக, 36 ரயில்களும் என, 68 ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. வாராந்திர ரயில்களும் சேரும் போது எண்ணிக்கை, 75ஐ தாண்டுகிறது.வடமாநிலத்தவர், சீசன் டிக்கெட்தாரர் என, 2,000 பேர் வந்திறங்குகின்றனர்; தினசரி 3,000 பேர் திருப்பூரில்இருந்து ரயில் ஏறி பயணிக்கின்றனர். இவ்வளவு பேர் வந்து செல்லும் ஸ்டேஷனில், இரண்டு பிளாட்பார்மிலும் ஒரு உணவகம் கூட இல்லை.ரயில் பயணிகள் கூறியதாவது:ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே செல்ல வேண்டுமெனில், அரை கி.மீ., தள்ளித்தான் உணவகம் உள்ளது. ஸ்டேஷனுக்குள் வந்து விட்டு டிக்கெட் வாங்கி விட்டு, சாப்பிட சென்று விட்டு திரும்புவதற்குள், ரயில் வந்து விடும் நிலை உள்ளது. கோவை, ஈரோடு ஸ்டேஷன்களில் பிளாட்பார்மிலேயே உணவகம் உள்ளது. நாள் முழுதும் உணவு பதார்த்தங்கள் சாப்பிட கிடைக்கிறது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில் உணவகம் அமைத்தால், குடும்பத்துடன் ரயில் ஏற வரும் பயணிகள், வயதானவர்கள், குழந்தைகளுடன் வருவோருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் ரயில் விட்டு இறங்குவோரும் உணவருந்தி விட்டு செல்ல வசதியாக இருக்கும்.இருக்கிறது இடம்முதல் பிளாட்பார்மில் செயல்பட்டு வந்த பார்சல் புக்கிங் ஆபீஸ், இடமாற்றம் செய்யப்பட்டு, பிளாட்பார்முக்கு வெளியே, ஆர்.பி.எப்., அலுவலகம் செல்லும் வழியில் செயல்படுகிறது. பார்சல் புக்கிங் அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய இடம், பயன்பாடு இல்லாமல் ஷட்டர் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி 'அம்ரூத் பாரத்' திட்டத்தில் பணி நடந்து வரும் போது, இவ்விடத்தில் உணவகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை