உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெவ்வேறு விபத்துகள்; 3 பேர் பரிதாப பலி

வெவ்வேறு விபத்துகள்; 3 பேர் பரிதாப பலி

திருப்பூர்: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் விஸ்வநாத், 50. இவர் போயம்பாளையத்தில் தங்கி, புதிய கட்டடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் போயம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் மதுபோதையில் ரோட்டில் கிடந்தார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத, நான்கு சக்கரம் வாகனம் மோதியதில், விஸ்வநாத் படுகாயடைந்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். n திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சர்வீஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு, 50 வயது மதிக்க நபர் ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அந்த நபர் பரிதாபமாக இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். n பொங்கலுாரில், திருச்சி ரோட்டை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து கோவை நோக்கி சென்ற கார் மோதி, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் சரவணகுமார்; எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன வேலை பார்த்தார் என்பது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !