உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அபாரம்; டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி போட்டி துவக்கம்

திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அபாரம்; டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி போட்டி துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் 'ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், 16 வயதுக்குட்பட்ட அகில இந்திய அணிகளுக்கு இடையேயான டி.எஸ்.சி.,சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி, முருகம்பாளையம், வயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று துவங்கியது. எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் துவக்கி வைத்து பேசினார்.ஏ மற்றும் பி பிரிவில் தலா நான்கு அணிகள் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. 30 ஓவர் கொண்ட தொடரான இதில், வரும், 17ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கின்றன. வரும், 18ல் அரையிறுதி; 19ல் இறுதிப்போட்டி நடக்கிறது.ஆர்.எஸ்.ஜி., எஸ்.ஜி., கிரிக்கெட் ஸ்கூல் கேரளா அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்று திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கேரளா அணி, 28.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 85 ரன் (ஹேமந்த் - 22 ரன், ஜெயதேவ் - 15 ரன்) எடுத்தது. ஷகீல் 4 விக்கெட்; தர்ஷன் ரெட்டி 3 விக்கெட் கைப்பற்றினர். திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, 16.1 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 88 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபிநந்தன், ஆறு பவுண்டரிகள் விளாசி, 42 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஷகீல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற டான் போஸ்கோ சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 30 ஓவரில், பத்து விக்கெட் இழப்புக்கு, 140 ரன்கள் எடுத்தது; மோகேஷ், 40 ரன், ரிஷாந்த், 21 ரன் எடுத்தனர். திரிபணித்துரா கிரிக்கெட் அகாடமி அணி பவுலர் அபிேஷக் அபி, நான்கு விக்கெட் வீழ்த்தினார். மெல்வின் ஆண்டனி, ஒரு ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்து அசத்தி, இரண்டு ரன் மட்டும் கொடுத்தார்.திரபணித்துரா அணி 27 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அசத்தலாக ஆடி, முரளிமாதவ் அரைசதம் கடந்தார் (54 ரன்). அபிேஷக் அபி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ