உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று புரட்டாசி சனிக்கிழமை ; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

இன்று புரட்டாசி சனிக்கிழமை ; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில், இன்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் துவங்குகின்றன.புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, புரட்டாசி சனிக்கிழமைகளில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் இன்று, புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள் துவங்குகின்றன.திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். துளசி மாலை சாற்றி, பெருமாளை வழிபடுவதுடன், தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி படைத்து வழிபடுவதும் வழக்கம்.திருப்பூர் பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர், காலை மற்றும் மாலை என, இரண்டு வேளையும், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளையும், பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் துவக்கியுள்ளனர்.மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவிலில், கடந்த 14ம் தேதி முதல், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு துவங்கிவிட்டது.தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், கருலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி காரணப்பெருமாள் கோவில் என, அனைத்து பெருமாள் கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கான பணிகள் துவங்கியுள்ளன.பக்தர்களுக்கு அடிப்படை வசதி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ராமசாமி கோவில்

கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நெரிசலை தவிர்க்கவும் கம்புகள் மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.போக்குவரத்து கழகம் சார்பில் ராமசாமி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி விடுவர் என்பதால் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ