உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி தபால் அலுவலகத்தில் வேண்டும்

ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி தபால் அலுவலகத்தில் வேண்டும்

பல்லடம் : நகர தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையிலான நகர பா.ஜ.,வினர், பல்லடம் தபால் அலுவலரிடம் வழங்கிய கோரிக்கை மனு:பல்லடம் வட்டாரத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளி மாநில மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில், தனியார் ஏஜென்சிகளை அணுகி கூடுதல் கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. , தொழிலாளர்கள், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பல்லடம் தபால் அலுவலகத்திலேயே ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.பல்லடம் துணை தபால் அலுவலகம் கடந்த 1967ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம், 58 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது. கட்டடத்தை புனரமைக்க வேண்டும். இங்கு, ஆதார் சேவைகள் வழங்க நிரந்தர பணியாளர் இன்றி, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள ஓட்டு கட்டத்தில் ஆதார் சேவை மையம் அமைத்து, பணியாளரையும் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை