அரசு பணி தேர்வுக்கு குண்டடத்தில் பயிற்சி
திருப்பூர்: குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு பணி போட்டி தேர்வுகான பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின்படி, கள உதவியாளர் பணியில், மொத்தம் 1,794 காலிப்பணியிடங்களுக்கு நவ., மாதம் 16ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு ஐ.டி.ஐ.,யில் எலக்ட்ரிசியன், ஒயர்மேன் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 11ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இப்பயிற்சியில் வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 -299 9152 அல்லது 94990 55944 என்ற எண்ணிலோ பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை உரிய தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.