மேலும் செய்திகள்
சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்
11-Jul-2025
உடுமலை; குடிமங்கலம் வட்டாரத்தில், தானிய பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் சாகுபடியை அதிகரிக்கும் வகையிலும், மகசூல் மற்றும் கால்நடைகளுக்கு தீவனமாகும் தட்டு விளைச்சலை கொடுக்க கூடிய வகையில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகா பேசியதாவது : இன்றைய கால கட்டத்தில் நோய்கள் அதிகரிக்க, நமது உணவு பழக்க, வழக்கங்கள் மாறியதே காரணமாகும். பெரும்பாலும் அரிசி சார்ந்த உணவுகளை உண்கிறோம். அரிசியில் உள்ள கார்போ ைஹட்ரேட் வேலை செய்வதற்குரிய எரிசக்தி கலோரியை மட்டுமே கொடுக்கிறது. இது ஆரோக்கியம் தராது. எனவே, அரிசி உணவுடன், புரதச்சத்து தரக்கூடிய பயறு வகைகள், முட்டை, பால் ஆகியவற்றை சேர்க்கும் போது புரதச்சத்து கிடைக்கிறது. புரதச்சத்து மிக்க தானியங்களான சாமை, கம்பு, தினை, ராகி, வரகு, குதிரைவாலி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஆரோக்கியம் காக்கிறது. இதனால், தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், விவசாயிகளுக்கு விதைகள், நுண்ணுாட்ட உயிர் உரங்கள், உயிரியல் காரணிகள், நானோ யூரியா மற்றும் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. செயல்விளக்க திடல்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார். பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், 'உயர் விளைச்சல் அளிக்கும் சோளம் கோ-32, கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், விதை நேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம். உயிரியல் காரணிகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
11-Jul-2025