உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து போராட்டம்

திருப்பூர்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி, திருப்பூர் போக்குவரத்து தொழிலாளர்கள் வேப்பிலை அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய டி.ஏ., மற்றும் பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை முன், 52வது நாளாக நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று தொழிற்சங்க நிர்வாகி தேவநேசன் தலைமையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேப்பிலை அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை ஏற்க மறுக்கும் பேயை, உடுக்கை அடித்து வேப்பிலையால் அடித்து விரட்டுவது போல நடந்த நுாதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. மா.கம்யூ., திண்டுக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் கருப்பசாமி, திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை