உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனம் அல்லாத பகுதியில் மரம் வளர்க்க திட்டம்

வனம் அல்லாத பகுதியில் மரம் வளர்க்க திட்டம்

திருப்பூர்; சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, வனப்பகுதி மட்டுமல்லாமல், வனம் அல்லாத பகுதிகளில் மரக்கன்று நடவும், புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள 'செக்போஸ்ட்'களில், பாலிதீன் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பம் அதிகரிப்பு போன்றவை, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை, இப்பிரச்னையை சமாளிக்க, வனப்பரப்பை அதிகரிக்கவும், வனம் அல்லாத நகரப்பகுதிகளில் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று, சர்வதேச தினம் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது; இதையொட்டி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சில வழிகாட்டுல்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதிகளில் பாலிதீன் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும். புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பாலிதீன் பொருட்களுடன் காப்பகத்துக்குள் நுழைவதை தவிர்க்கும் வகையில், 'செக்போஸ்ட்'களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். வனம் அல்லாத நகரப்பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி