உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்

பலியானவர்களுக்கு அஞ்சலி; பா.ஜ., இன்று மவுன ஊர்வலம்

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை: ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளாக சென்றவர்களில், ஹிந்து மக்களை கொன்று குவித்துள்ளனர்.இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த ஹிந்துக் களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையிலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும், விரைவில் நலம் பெற வேண்டியும், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், இன்று (25ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் குமரன் சிலை முதல், காந்தி சிலை வரை மவுன அஞ்சலி ஊர்வலம் மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடைபெறவுள்ளது.இதில், திருப்பூரில் உள்ள அரசியல் சார்பற்ற இயக்கங்கள், வணிகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை