உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உச்சிமாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா

உச்சிமாகாளியம்மன் கோவில் ஆண்டு விழா

உடுமலை : உடுமலை அருகே மலையாண்டிபட்டணம் உச்சிமாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.மலையாண்டிபட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவில், 14ம் ஆண்டு விழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீர்த்தம் எடுத்து வருதல், மூங்கில் கம்பம் நடுதல், சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு போட்டும், பொங்கல் வைத்தும் வழிப்படனர். பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு நடந்தது. சுவாமிக்கு மகா அபிேஷகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை