உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி

சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி

திருப்பூர் : 'ஒரே மாதிரியான மின் கட்டணம் விதித்தால், ஊழல் குறையும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.அவர் கூறியதாவது:தமிழக மின்வாரியம் கடனில் தத்தளிக்கிறது. மின் இணைப்புகளுக்கு வெவ்வேறு கட்டணம் விதிப்பது, இலவச மின்சாரம் போன்ற நடைமுறைகள் தான் காரணம். விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. குடியிருப்பு, தொழிற்சாலை, வர்த்தகம், உள்ளாட்சிகளில் தெரு விளக்கு, மின் மோட்டார் பயன்பாடு என பல விகிதாச்சாரத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதான், முறைகேடு மற்றும் ஊழலுக்கு காரணமாக அமைகிறது.விவசாய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினால் இலவச மின்சாரம் அவசியமில்லை. அதோடு, வருமான வரி விலக்கு, மானியம், கடன், தள்ளுபடி, நிவாரணம் என எதையும் விவசாயிகள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகள் இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை