ஒளிராத தெரு விளக்குகள்; இருட்டில் தவிக்கும் மக்கள்
உடுமலை ; உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள தெரு விளக்குகள் பராமரிப்பு குளறுபடி காரணமாக, நகரம் இருளில் மூழ்கியுள்ளது.உடுமலை நகராட்சியில், பழநி ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என, 33 வார்டுகளிலும், 700க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன.அதே போல், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு மற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.தெரு விளக்குகள் பராமரிப்பதில் அலட்சியம் காரணமாக, நகரிலுள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள மின் விளக்குகளும் பராமரிக்காததால், பஸ் ஸ்டாண்ட் முழுவதும்இருளில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்பதோடு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்து வருகிறது.எனவே, தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.