உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாணியர் சங்க முப்பெரும் விழா

வாணியர் சங்க முப்பெரும் விழா

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வாணியர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா நேற்று நடந்தது. குப்பாண்டம்பாளையம் வாணியர் திருக்கல்யாண மண்டபத்தில், தென்னிந்திய வாணியர் சங்க புதிய நிர்வாகிகள் பாராட்டு விழா, நலத்திட்ட உதவி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது.தென்னிந்திய வாணியர் சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்; மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலாளர் மாரிமுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கடவுள் வாழ்த்து, குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.தையல் மெஷின், மாணவ, மாணவியருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் கை கடிகாரம் வழங்கப்பட்டது. விழாவில், திருப்பூர் மாவட்ட தலைவர் முருகேசன், அவிநாசி சங்க பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோருக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை