மேலும் செய்திகள்
மரக்கன்றுகளை பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள்
24-Oct-2025
திருப்பூர்: அவிநாசி, ஊஞ்சப்பாளையத்தில் உள்ள வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், இதற்கு மாற்றான பொருட்கள் குறித்த சொற்பொழிவு, நாடகம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மரக்கன்றுகள் நடப்பட்டன. அவிநாசியில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடைபயணத்தை இப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர். தாளாளர் ஓம் சரவணன், முதல்வர் அஜிதா ஆகியோர் துவக்கிவைத்தனர். ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Oct-2025