காய்கறிகள் விலை சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
திருப்பூர்: திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள வடக்கு உழவர் சந்தையில், இஞ்சி, காலிபிளவர், கத்தரி, முள்ளங்கி விலை குறைந்துள்ளது.வழக்கமாக கேரட், பீன்ஸ் கிலோ, 70 முதல், 100 ரூபாய் வரை விற்கப்படும். பனிக்காலம் வரத்து அதிகம் என்பதால்கிலோவுக்கு, 20 முதல், 25 ரூபாய் குறைந்து கேரட், 54 ரூபாய், பீன்ஸ், 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சின்ன வெங்காயம் விலை மட்டுமே தற்போது விவசாயிகளுக்கு ஆறுதலாக உள்ளது. பெரிய வெங்காயம், 50 ரூபாய். பனி காரணமாக இலை கருகல் அதிகமாவதால், கறிவேப்பிலை வரத்து குறைந்து கிலோ, 50 ரூபாய், ஒரு கட்டு, 20 ரூபாய்க்கு விற்ற. தை மாத பிறப்புக்கு முன் துவங்கிய எலுமிச்சை விலை இறக்கம் இன்னமும் தொடர்வதால், கிலோ, 70 ரூபாயாகி விட்டது. விலை நிலவரம்
திருப்பூர் வடக்குஉழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ - 18 ரூபாய், கத்தரி (பவானி) - 50, கத்தரி (சாதா) - 30, வெண்டை - 40, புடலை - 25, பாகற்காய் - 38, பீர்க்கன்காய் - 42, அவரைக்காய் - 45, பச்சை மிளகாய் - 40, கொத்தவரங்காய் - 40, பீட்ரூட் (ஊட்டி) 50, பீட்ரூட் (உள்ளூர்) 30, முள்ளங்கி, 26, சுரைக்காய், 22, பூசணி, 18, அரசாணி, 25, சின்ன வெங்காயம் (முதல் ரகம்) 70, கேரட், 54, பீன்ஸ், 55, முட்டைகோஸ், 28, உருளைக்கிழங்கு, 50, காலிபிளவர், 35, மேரக்காய், 22, பொறியல் தட்டை, 40, சேனைக்கிழங்கு, 45, கொத்தமல்லி கிலோ, 40, புதினா, 14, கறிவேப்பிலை, 50, எலுமிச்சை, 70. இஞ்சி, 55 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து குறையும் தக்காளி
மாத துவக்கம் முதலே தக்காளி விலை குறைந்து வருகிறது. பொங்கலுக்கு முன் கிலோ, 30 ரூபாய் இருந்தது. பண்டிகைக்கு பின், 25 ரூபாயானது. தற்போது, கிலோ, 20 ரூபாயாகியுள்ளது. மொத்த விலையில் ஐந்து கிலோ, 100 ரூபாய் வரை தக்காளி விற்கப்படுகிறது.வரும் நாட்களில் தைமாத முகூர்த்தம், சீசன் காரணமாக விற்பனை அதிகரித்தால் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர், விவசாயிகள்.