பல்லடம் உழவர் சந்தையில் ரூ.1.14 கோடி காய்கறி விற்பனை
பல்லடம்; பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில், உழவர் சந்தை உள்ளது. நாள் ஒன்றுக்கு, 3.50 - 4.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. விளைபொருட்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். கடந்த செப்., மாதம் உழவர் சந்தைக்கு, 336.21 டன் காய்கறி, 135.5 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முப்பது நாட்களில், ஒரு கோடியே, 14 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்தது. விளை பொருட்களை விற்பனை செய்ய, 1,391 விவசாயிகளும், காய்கறி, பழங்கள், கீரை உள்ளிட்டவற்றை வாங்க, 43 ஆயிரத்து, 467 வாடிக்கையாளர்களும் வந்துள்ளனர். உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில்,'புரட்டாசி மாத பிறப்புக்கு பின் காய்கறி விற்பனைசுறுசுறுப்பாக இருந்தது. வரும் நாட்களில் வரத்து மற்றும் விலைக்கு ஏற்ப விற்பனை இருக்கும்,'என்றனர்.