உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம மக்கள் பாதிப்பு

கிராம மக்கள் பாதிப்பு

உடுமலை; உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.உடுமலை பகுதியில் உள்ள கிராம மக்கள், நகரங்களுக்கு வந்து செல்ல பஸ்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி