உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாலுகா ஆபீசில் காத்திருப்பு போராட்டம்

தாலுகா ஆபீசில் காத்திருப்பு போராட்டம்

காங்கயம்: காங்கயத்தில் தனி தாசில்தார் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கடந்த, 2018ல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ், 218 குடும்பங்களுக்கு தலா, மூன்று சென்ட் ஊதியூர், செங்கோடம்பாளையத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2025ம் ஆண்டு வரை பட்டா தராமல் காலம் தாழ்த்தி வரப்பட்டது. இந்நிலையில், கடந்த, 2 மாதம் முன், 80 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு மட்டும் இலவச பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள, 138 குடும்பங்களுக்கு தரவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் காங்கயம் தனி தாசில்தார் கோவிந்தராஜிடம் கேட்டதற்கு செங்கோடம்பாளையத்தில், 15 மனைகள் உள்ளது என கூறினார். விரைவில், பட்டாக்களை வழங்க வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தனி தாசில்தார் அலுவலகம் முன் நேற்று காலை 11:00 மணியளவில் அடுப்பு, பாத்திரங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் தாசில்தார் பேச்சு நடத்தினார். 14ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை