உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைந்து குடிநீர் விரயம்; கோடை காலம் வருவதை உணராத அதிகாரிகள்

குழாய் உடைந்து குடிநீர் விரயம்; கோடை காலம் வருவதை உணராத அதிகாரிகள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகும் அவலம் நீடிக்கிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 60வது வார்டு அமராவதிபாளையம் பகுதியில், 4வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் இத்தொட்டியில் நிரப்பப்பட்டு, வினியோக குழாய்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இத்தொட்டிக்கு நீர் நிரம்பிய பின் முறையாக தண்ணீர் வருவது நிறுத்தப்படுவதில்லை. இதனால், பெரும்பாலான நேரங்களில் தொட்டி நீர் நிரம்பி வழிந்து வீணாகிறது. இதனால், தொட்டி அமைந்துள்ள வளாகம் முழுவதும் சகதிக்காடாக உள்ளது.இது ஒருபுறம் இருக்க, வினியோக குழாய்களிலும் சேதம் ஏற்பட்டு, குடிநீர் வீணாவதும் மறு புறம் காணப்படுகிறது. மேல்நிலைத் தொட்டி வளாகம் அமைந்துள்ள இடத்திலேயே ரோட்டின் எதிர்புறத்தில் இந்த குழாய் சேதமடைந்துள்ளது. இதிலிருந்து பெருமளவு குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்கிறது. அதேபோல் இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் அலகுமலை செல்லும் ரோட்டிலும் ஒரு இடத்தில் இந்த குழாய் உடைந்து சேதமடைந்துள்ளது.இவ்விரு இடங்களிலும் வெளியேறும் குடிநீர் ரோட்டில் சென்று பாய்வதால், ரோட்டோரத்தில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், ரோடு சேதமடைவதோடு, குடிநீரும் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் நெருங்கும் நிலையில் குடிநீர் வீணாகும் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை