உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மல்பெரி செடிகளுக்கு நீர் நிர்வாகம்; விவசாயிகளுக்கு அட்வைஸ்

மல்பெரி செடிகளுக்கு நீர் நிர்வாகம்; விவசாயிகளுக்கு அட்வைஸ்

உடுமலை; 'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மல்பெரி தோட்டங்களில், செடிகளின் இடைவெளியில், மூடாக்கு அமைத்து, ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்,' என பட்டு வளர்ச்சித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக மல்பெரி செடிகள் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தரமான மல்பெரி இலைகள் கிடைத்தால் மட்டுமே, பட்டுக்கூடு உற்பத்தியும் சீராக இருக்கும். எனவே, மல்பெரி தோட்ட பராமரிப்பில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பட்டு வளர்ச்சித்துறையினர் கூறுகையில், 'வெப்பம் அதிகரித்து காணப்படும் போது, மல்பெரி தோட்டத்தின் நீர் நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரங்களில் நீர்ப்பாசனம் செய்யலாம். தண்ணீர் எளிதாக ஆவியாவதை தடுக்க செடிகளின் இடைவெளியில், தென்னை நார் கழிவு மற்றும் மட்டைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம். இதனால், மண்ணின் ஈரத்தன்மை குறையாமல் இருக்கும்,' என்றனர். மழை இடைவெளி விட்டுள்ளதால், புழு வளர்ப்பு மனைகளிலும், சீதோஷ்ண நிலையை பராமரிக்க தேவையான பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ