வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படி ஏஜென்ட் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் பிச்சை எடுத்து, நிர்வாணமாக நின்று போராடி சட்டம் கூடாது என்றீர்கள். இப்போது புலம்புங்கள்.
பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்துடன் தமிழக தினசரி காய்கறி உற்பத்தியாளர் சங்க இணைப்பு விழா, பல்லடம் அருகே, வேலம்பாளையத்தில் நேற்று நடந்தது.விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வேலுமணி வரவேற்றார். கள் இயக்க தலைவர் நல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாநிலத் தலைவர் சண்முகம் பேசுகையில், ''வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பல்கலை உள்ளிட்டவை இருந்தும் உலகிலுள்ள அனைத்து நோய்களும் தென்னையை தாக்குகின்றன. இதற்கு தீர்வு காண முடியவில்லை.இவ்வாறு, பாதிக்கப்படும் தென்னை விவசாயிகள்தான், கள் தடை நீக்கம், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுத்து வருகிறது'' என்றார்.காய்கறி உற்பத்தியாளர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் பேசுகையில், ''எங்கள் வீட்டு பெண்களுக்கும் விளை நிலத்தில் இறங்கி உழைக்க, பாடுபட தெரியும். ஆனால், விளைவித்த காய்கறிகளை உரிய விலைக்கு விற்க தெரியாது. கமிஷன் ஏஜென்ட்கள் நிர்ணயிப்பதே விலை.வாங்கிய கடனை கட்டி விடுவோமா; குழந்தைகளை படிக்க வைத்து விடுவோமா என்ற ஏக்கத்துடன், விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்துவிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு விவசாயியும் உள்ளனர்'' என்றார்.
இப்படி ஏஜென்ட் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் பிச்சை எடுத்து, நிர்வாணமாக நின்று போராடி சட்டம் கூடாது என்றீர்கள். இப்போது புலம்புங்கள்.