உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் கதிரவன் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா

மங்கலம் கதிரவன் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா

திருப்பூர: மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 27வது ஆண்டு விழா நடந்தது.விழாவுக்கு, கதிரவன் மெட்ரிக் பள்ளி செயலாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஸ்ரீசரண்யா, முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்ஷினி, ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பேசுகையில், ''பெற்றோர், தங்கள் குழந்தைகள் கஷ்டப்படாமல் வளர வேண்டும் என நினைப்பதை விட, தாங்கள் கஷ்டப்படுவது தெரியாமல் வளர்க்க கூடாது'' என்றார். மாணவ, மாணவியரின் நடனம், கராத்தே, சிலம்பம், யோகா மற்றும் பிரமிடு காட்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நடனம், கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் நடன தொகுப்பு, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இருந்தது. தமிழ் நாடகத்தை, நாட்டிய நாடகமாக வழங்கியது, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை