உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி எப்படி இருக்கும்? கள ஆய்வில் மாணவர்கள் 

கல்லுாரி எப்படி இருக்கும்? கள ஆய்வில் மாணவர்கள் 

திருப்பூர்;தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள், கல்லுாரிக்கு சென்று, படிப்பு, நிர்வாகம், கல்லுாரி வகுப்பறை, ஆய்வகம், லேப் உள்ளிட்ட செயல்பாடுகளை காண வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.அவ்வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நிகழ்வுகளை நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமார் நகர், அனுப்பர்பாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என, 150 மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உயர்கல்வி படிக்கும் போது கிடைக்கும் சலுகை, பள்ளி படிப்பு முடிந்தவுடன் அரசு கல்லுாரியில் இணைவது எப்படி, வேலை வாய்ப்பு தரும் படிப்புகள், நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு, தேசிய மாணவர் படையின் செயல்பாடுகளை, விளக்கினார்.முன்னதாக, கல்லுாரி பேராசிரியர் விநாயகமூர்த்தி பள்ளி மாணவர்களை வரவேற்றார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியை சிவசெல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ