உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேதமான சாலைகள் சீராவது எப்போது?

சேதமான சாலைகள் சீராவது எப்போது?

திருப்பூர், ;'மக்களுடன் மேயர்' திட்டத்தில், நேற்று மாநக ராட்சி 60வது வார்டு பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று மக்களைச் சந்தித்து, மேயர் தினேஷ்குமார் குறைகள் கேட்டறிந்தார். வார்டு கவுன்சிலர் கோமதி, வார்டு பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து விளக்கினார்.ஜி.என்., கார்டன் பகுதிக்கு தாராபுரம் ரோட்டிலிருந்து வரும் ரோட்டை அகலப்படுத்துதல், பாலாஜி நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் பிரதான குழாய்கள் பதித்த இடங்களில் குழாய் உடைப்பு காரணமாக சேதமடைந்த ரோட்டை சரிசெய்தல், குடிநீர் சப்ளை இடைவெளியை குறைத்தல், வார்டில் ஆயிரம் தெருவிளக்குகள் தேவை; 300 விளக்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.கூடுதல் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.பிள்ளையார் நகர் மற்றும் புதிய பிள்ளையார் நகர் பகுதிகளில், வீடுகளிலிருந்து கழிவு நீர் ரோட்டில் செல்வதைத் தவிர்க்க குழிகள் அமைத்து அதில் கழிவுநீரை விடவும், மாநக ராட்சி வாகனம் மூலம் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.''கூடுதலாக பேட்டரி வாகனங்கள் ஒதுக்கி, வீடுகளில் நேரடியாக குப்பைகள் பெறப்படும். வரும் பிப்., மாதத்துக்குள் பணிகள் முடித்து 24 மணி நேர குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.பிரதான குழாய் பதித்து சேதமான ரோடுகள், குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தி முடித்த பின் உடனடியாக சரி செய்யப்படும்; தெருவிளக்குகள் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சரி செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை