உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீட் தேர்வு விண்ணப்பித்தல்; எப்போது வேகமெடுக்கும்

நீட் தேர்வு விண்ணப்பித்தல்; எப்போது வேகமெடுக்கும்

உடுமலை;இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மே 5ம் தேதி நடக்கவுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 9ம் தேதி வெளியிட்டது. ஒரு வாரமாகிய நிலையில், தேர்வுக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.மாவட்ட, 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:பிளஸ் 2 செய்முறைத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் மாணவ, மாணவியர் செய்முறை தேர்வை கவனமாக எதிர்கொண்டு வருகின்றனர்.நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர், தாளாளர்கள் வாயிலாக, விரிவான வழிகாட்டுதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு பகுதியில் இருந்து என்னென்ன சான்றிதழ் வேண்டுமென கேட்டு, விளக்கம் பெற்று வருகின்றனர். செய்முறை தேர்வு முடிந்த பின், நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பர். மேலும் தகவல்கள் தேவைப்படுபவர்கள், 73734 48484 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ