உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களை வைத்து துாய்மை பணி எதற்கு? பெற்றோர் கண்டனம்

மாணவர்களை வைத்து துாய்மை பணி எதற்கு? பெற்றோர் கண்டனம்

காங்கயம்; காங்கயம் ஒன்றியம், உட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சியில், பெரிய இல்லியத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 400 மாணவர்கள் படிக்கின்றனர். தினமும் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் அங்கு பயிலும் மாணவர்கள் தான் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, சேகரமாகும் குப்பையை, பள்ளி வளாகத்துக்கு வெளியே கொண்டு வந்து கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். பள்ளிக்கு கல்வி பயில அனுப்பும் மாணவர்களை பள்ளியில் குப்பை அள்ளவும், அதை ஆபத்தான முறையில் தீயிட்டு எரிக்கவும் பயன்படுத்தும் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளிக்கு துாய்மைப் பணியாளர் நியமிக்க வேண்டும். இது போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும், என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை