உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகற்றுவதற்கு தயக்கம் ஏன்?

அகற்றுவதற்கு தயக்கம் ஏன்?

பொங்கலுார் ஒன்றியம், சேமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. அந்த கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மின்வாரியம் சார்பில் பழுதடைந்த மின் கம்பத்துக்கு பதிலாக புதிதாக இரண்டு கம்பங்கள் அதன் அருகிலேயே நடப்பட்டன. புதுக்கம்பம் நட்டு பல மாதங்கள் ஆகிறது. இன்னும் பழைய கம்பத்தை அகற்றவில்லை. புதுக்கம்பம் நட்டும் இன்னும் பழைய கம்பத்தை அகற்றாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.உடனடியாக பழைய கம்பத்தை அகற்ற வேண்டும். புது கம்பத்தில் டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள், மின்வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை