உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

திருப்பூர்: பல்லடத்தில் மனைவியை கொன்ற வழக்கில், கணவருக்கு மகிளா கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.பீஹார் மாநிலம், பிஷ்னாபூரை சேர்ந்தவர் முகமது காசிம், 40. இவர் பல்லடம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் தனது மனைவி ஜமீலா சாத்துான், 33 உடன் வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவ்வப்போது தகராறு செய்து வந்தார். கடந்த ஆண்டு வீட்டில் இருந்த போது, தம்பதியருக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பல்லடம் போலீசார் கணவர் முகமது காசிமை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை