உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

பாலத்தில் பதம் பார்க்கும் கம்பிகள்: மாநில நெடுஞ்சாலையில் அவலம்

உடுமலை; உயர் மட்ட பாலத்தின் ஓடுதளம் பராமரிப்பு இல்லாமல் பல்லாங்குழியாக மாறியுள்ளதால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையில் இருந்த தரைமட்ட பாலம் அகற்றப்பட்டு, கடந்த, 2019ல் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்த மாநில நெடுஞ்சாலையில், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல், உயர் மட்ட பாலத்தின் ஓடுதளம், குண்டும், குழியுமாக மாறி விட்டது. சில இடங்களில், குழி அதிகரித்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இரவு நேரங்களில், பாலத்தின் வழியாக செல்லும், இருசக்கர வாகனங்களின் டயர்களை கான்கிரீட் கம்பிகள் பதம் பார்க்கிறது. குழிகளை பார்த்து, வாகனங்களை மெதுவாக இயக்கும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. மழைக்கு பிறகு, பாலத்தின் ஓடுதளம் முற்றிலுமாக சேதடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 'பேட்ஜ் ஓர்க்' பணிகளும் பலனில்லாமல், குழிகள் அதிகரித்து வருகிறது.நடைபாதையும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கனரக போக்குவரத்து அதிகமுள்ளதால், பாலத்தை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது.நெடுஞ்சாலைத்துறை உடுமலைஉட்கோட்டத்தினர், பாலத்தின் ஓடுதளத்தை முழுமையாக புதுப்பித்து, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 07, 2024 05:22

விடியலரசு பாலம்னா அண்ணாமலை கிட்டே சொல்லுங்க. ஒன்றிய அரசு பாலம்னா விடியல் ஆளுங்க கிட்டே சொல்லுங்க. ரிப்பேர் பண்ண ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், மாறி மாறி வசை பாடிக் கொள்வார்கள்.


முக்கிய வீடியோ