உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழையால் பணிகள் தாமதம்

மழையால் பணிகள் தாமதம்

மாநகராட்சி மன்ற கூட்டத்தில், மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:மழை பாதிப்பு பணிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சென்றதால் சில பணிகள் தாமதமானது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் புதிய ரோடு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட ரோடு பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் செய்து முடிக்கப்படும்.குடிநீர் சப்ளையில் சில இடையூறு ஏற்பட்டது. 4வது திட்டத்தில் குடிநீர் எடுக்கும் இடத்தில் தடுப்பணை கட்டும் பணி சிறிதளவு உள்ளது. விரைவில், நிறைவடையும். பிரதான குழாய்களில் நெடுஞ்சாலையில் உடைப்புகள் சரி செய்யும் பணியும் நடக்கிறது.வரி விதிப்பு பணிகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இது கண்காணிக்கப்படுகிறது. தாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று மாதமாக பொக்லைன் வாகனம் பழுதாகி ரோட்டில் நின்று கிடக்கிறது. வாடகை வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !