மேலும் செய்திகள்
காற்றினால் வாழையில் சேதம்; விவசாயிகளுக்கு நஷ்டம்
01-Sep-2025
உடுமலை; கரும்பு சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் பணிகளை ஏழு குள பாசன திட்ட விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதிகளில், முன்பு கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. பல்வேறு காரணங்களால், அப்பகுதியில் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. தற்போது, போடிபட்டி, பள்ளபாளையம், வடபூதனம் உள்ளிட்ட கிராமங்களில், வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஏழு குள பாசன திட்டத்தில், குளங்களின் வாயிலாக நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களில், நடப்பு சீசனில் கரும்பு நடவுக்காக பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சீசனில், கரும்பு மற்றும் வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகள் கூறுகையில், 'கரும்பு சாகுபடியில் நஷ்டத்தை தவிர்க்க, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக பிழிதிறன் மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் வகையில், தொழில்நுட்பட ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஏழு குள பாசன பகுதியில், கரும்பு சாகுபடி முற்றிலுமாக காணாமல் போவதை தவிர்க்க முடியும்,' என்றனர்.
01-Sep-2025