உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாதப்பூரில் டோல்கேட் அமைக்கும் பணி தீவிரம்

மாதப்பூரில் டோல்கேட் அமைக்கும் பணி தீவிரம்

பல்லடம்,; பல்லடம் -- வெள்ளகோவில் வரையிலான கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது.ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, மைய தடுப்பு கற்கள்அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, பல்லடம் அடுத்த மாதப்பூரில், டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மாதப்பூர் பகுதியில், ஏற்கனவே இருந்த டோல்கேட், கடந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.ரோடு விரிவாக்க பணி காரணமாக, பழைய டோல்கேட் இடித்து அகற்றப்பட்டு, தற்போது அதே இடத்தில் புதிய டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல்லடத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டு வரும் இந்த டோல்கேட்டுக்கு, பணிகள் துவங்கும் போதே விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இருப்பினும், பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது, டோல்கேட் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ரோடு விரிவாக்க பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், டோல்கேட் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதப்பூர் டோல்கேட்டுக்கு ஆரம்பம் முதல் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பயன்பாட்டுக்கு விடப்பட்ட பின்னரே விவசாயிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ