உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தலையில் கல்லை போட்டு  தொழிலாளி கொடூர கொலை

 தலையில் கல்லை போட்டு  தொழிலாளி கொடூர கொலை

திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா பஸ் ஸ்டாப் அருகே நேற்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த மக்கள், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். வடக்கு துணை கமிஷனர் பிரவீன் கவுதம், உதவி கமிஷனர் பிரதீப்குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், இறந்த நபர் அப்பகுதியில் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எடுத்து, பழைய பொருள் கடையில் எடைக்கு போட்டு வந்தவர் என்பது தெரிந்தது. இறந்தவருக்கு, 40 வயது இருக்கும், பெயர், எந்த ஊர் போன்ற விவரம் தெரியவில்லை. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை