உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்புச்சண்டை விளையாட்டு; அரசு பள்ளி மாணவர் அபாரம்

கம்புச்சண்டை விளையாட்டு; அரசு பள்ளி மாணவர் அபாரம்

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட, திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இதில், 14 வயதுக்குட்பட்ட, 30 கிலோ எடைக்கு குறைவான ஆண்கள் பிரிவு, கம்புச்சண்டை விளையாட்டில், கோல்டன் நகர் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி, 6ம் வகுப்பு மாணவர் பிரேம்குமார், மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார். மாணவியர் பிரிவு இரட்டை கம்பு வீச்சு போட்டியில், 7ம் வகுப்பு மாணவி ஹரிணிதா, 8ம் வகுப்பு மாணவர் இளமாறன் ஆகியோர் மூன்றாம் இடங்களை பிடித்தனர். அரசின் சார்பில் நடத்தப்படும் சிலம்ப போட்டிகளில், இப்பள்ளி மாணவ, மாணவியர் முதன் முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியை தேவகி, சிலம்ப பயிற்சியாளர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி