உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

உடுமலை: பிளாஸ்டிக் பயன்படுத்தாத பள்ளி, கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்கள், மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். திருப்பூர் கலெக்டர் மனீஷ் நாரணவரே அறிக்கை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளுடன், ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஒரு முறை தடைசெய்யப்பட்ட பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாத, பிளாஸ்டிக் இல்லாத சிறந்த, தலா, 3 பள்ளி, கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுடன், ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. முதல் பரிசு, 10 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசு, 5 லட்சம்; மூன்றாம் பரிசு, 3 லட்சம் பரிசு வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை, மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு நகல்களை, கலெக்டர் அலுவலகத்தில், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை