உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர்,: திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏழு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், சிக்கண்ணா கல்லுாரி - 1,008, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி - 1,100, காங்கயம் - 410, பல்லடம் - 500, உடுமலை - 864, அவிநாசி - 414, தாராபுரம் - 280 என இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திலும், ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. அரசின் கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் வசதிகளும் உள்ளன. அரசு கல்லுாரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன. தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகிறது. விருப்பமுள்ளோர், www.tngasa.inஎன்கிற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.'ஆன்லைனில்' விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அந்தந்த அரசு கல்லுாரிகளில் உள்ள உதவி மையங்களை அணுகி, விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, வரும் 27ம் தேதி கடைசிநாள். விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்டு, யு.பி.ஐ., வாயிலாகவும் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு, 044 - 24343106, 24342911 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை