சிறுமியுடன் திருமணம் போக்சோவில் வாலிபர் கைது
திருப்பூர்: காங்கயத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுமி, கோவையில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக, துாத்துக்குடியை சேர்ந்த பெயின்டர் அப்துல் காதர், 26 என்பவர் அறிமுகமானார். இவர் சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி பேசி வந்தார். கடந்த, 25 ம் தேதி சிறுமி மாயமானார். புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற வாலிபர் குழந்தை திருமணம் செய்து, அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, சிறுமியை மீட்ட போலீசார், வாலிபர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது
திருவண்ணாமலை, செங்கத்தை சேர்ந்தவர் வீரமணி, 23. திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். சிறுமி, எட்டு மாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு திடீரென ரத்த குறைபாடு ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரித்த டாக்டர்கள், சிறுமியின் குழந்தை திருமணம் குறித்து அறிந்தனர். தகவலின் பேரில், சமூக நலத்துறையினர் விசாரித்தனர். புகாரின் பேரில், தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வீரமணி மீது, 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.