உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் பலி

மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் பலி

திருப்பூர்; திருப்பூரில் காதலை ஏற்க குடும்பத்தினர் மறுத்த காரணத்தால் வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டை சேர்ந்தவர் யோகேஷ், 19. பனியன் தொழிலாளி. இவர் கடந்த, ஒரு ஆண்டாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விவகாரம் குறித்து தெரிந்த, இரு குடும்பத்தினரும் ஏற்க மறுத்து விட்டனர். இதனால், மனமுடைந்த யோகேஷ் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.சி. மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை