வன விலங்கு வேட்டைக்கு கூண்டு; வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
திருப்பூர்: பெருமாநல்லுார் அருகே, மேற்குபதியில் மர நாய், கீரி போன்ற வன விலங்குகளை வேட்டையாட கூண்டு தயாரித்து, விற்பனை செய்வது குறித்து திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விற்பனை தொடர்பாக, தீபன், 32 என்பவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த வீடியோ போன்றவற்றை பார்வையிட்டனர். பின், அவரை தொடர்பு கொண்ட வனத்துறையினர், கூண்டு வாங்குபவர்களை பேசி, நேரில் அழைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆறு மாதம் முன், ஒரு கூண்டு தயார் செய்து, விற்பனை செய்யும் நோக்கில் சமூக வலைதளத்தில், வனவிலங்குகளை எவ்வாறு பிடிப்பது போன்ற வீடியோ பதிவு செய்தது தெரிய வந்தது. அவர் மீது வன பாதுகாப்பு சட்டப்படி வழக்குபதிவு செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.