மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த தொழிலாளி பலி
08-Mar-2025
தெருநாய் கடித்து இருவேறுஇடங்களில் இருவர் பலியால் அச்சம்திருவண்ணாமலை, செங்கம் மற்றும் பனம்பாக்கம் அருகே, நாய் கடித்ததில் இருவர் பலியாயினர். *திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதீஷ், 32. பெங்களூருவில் பணியாற்றி வந்தார். கடந்த ஜன.,ல் பொங்கல் பண்டிகை கொண்டாட, சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவரை வெறிநாய் கடித்தது. அவர் சிகிச்சை பெறாமல் இருந்தார். இதனால் அவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன், ரேபீஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். உடலை ஊருக்கு எடுத்து சென்றால், ரேபீஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவலாம் என்பதால், சதீஷின் உடல், திருவண்ணாமலை மின் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. மேலும், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்களும் தடுப்பூசி போட்டு கொண்டனர். *ராணிப்பேட்டை மாவட்டம், பனம்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் டைலர் ரமேஷ், 45. இவர் நாய் வளர்த்து வந்தார். கடந்த, 15 நாட்களுக்கு முன், வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Mar-2025