மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
13 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அர்னேசா அம்மன் கோவில் உள்ளது. இங்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மாரியம்மன், அர்னேசா அம்மன், முத்தாலம்மன் ஆகிய பூங்கரகம் வீதி உலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, காப்பு கலைதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 3 பூங்கரகத்தில் வைத்திருந்த, 3 எலுமிச்சை பழங்கள், 3 வெள்ளி காசுகள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் தொழில் சிறக்கும், குடும்பம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளதால், அவற்றை, 77 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
13 hour(s) ago
05-Oct-2025