உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்

ரூ.10,000 லஞ்சம் பெற்ற பெண் தாசில்தார் சிக்கினார்

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 50; அரசு பணி கான்ட்ராக்டர். இவர், கண்ணமங்கலத்தில், அரசு பணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளார். அதற்கு சொத்து மதிப்பு சான்றளிக்க வேண்டும். இதற்காக, ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சீனிவாசன் கடந்த, 13ல் சென்று கேட்டபோது, தாசில்தார் மஞ்சுளா, சான்று வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். தர விரும்பாத சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய, 10,000 ரூபாயை நேற்று முன்தினம் இரவு மஞ்சுளாவிடம், சீனிவாசன் கொடுத்தார். அவர், இரவு வாட்ச்மேன் பாபுவிடம் கொடுக்குமாறு கூறினார். பாபு பணத்தை பெற்று, தாசில்தார் மஞ்சுளாவிடம் வழங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். அலுவலகத்தில் சோதனையிட்டு, ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்