மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
18 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
18 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதுரை, 46; கட்டட தொழிலாளி. இவர், மூன்று நாட்களுக்கு முன், 'பஜாஜ்' பைக்கில் கட்டட பணிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.பாச்சல் அருகே வந்தபோது, திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலையில், சிலர் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைத்திருந்தனர். அந்த நெல் மீது வாகனங்கள் ஏறாமல் இருக்க, கருங்கற்களை சாலையில் அடுக்கி வைத்திருந்தனர்.அந்த கல்லின் மீது கங்காதுரை பைக் ஏறியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர், பரிதாபமாக பலியானார். பாச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சாலையில் கருங்கல் வைத்து நெல்லை உலர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று கங்காதுரை உறவினர்கள் கண்ணக்குருக்கை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025