உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசாணைபாளயைம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அருண்குமார், 25; இவர், நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் நடந்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சீரியல் லைட் மீது, தவறுதலாக அருண்குமாரின் கை பட்டது. மின்கசிவால் அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் துாக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி