உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அரசு, அமைச்சரை கேலி செய்த வலைதள பதிவு குறித்து புகார்

அரசு, அமைச்சரை கேலி செய்த வலைதள பதிவு குறித்து புகார்

தமிழக அரசு மற்றும் அமைச்சரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க., வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.சமீபத்தில் சமூக வலைதளத்தில் அமைச்சர் மஸ்தானின் புகைப்படத்தை மார்பிங் செய்து, கட்சி தொண்டர் ஒருவருக்கு அமைச்சர் மதுபானம் புகட்டுவது போல புகைப்படம் வெளியானது. அந்த படத்திற்கு கீழ், 'கோதுமை பீர், ராகி ரம், கம்பு பிராந்தி என எல்லாம் வர வாய்ப்பிருக்கிறது' என கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து தி.மு.க., வழக்கறிஞர் அணியை சேர்ந்த கோபிநாத், திண்டிவனம் போலீசிலும், நெடுஞ்செழியன் வெள்ளிமேடுபேட்டை போலீசிலும் புகார் அளித்தனர்.புகாரில், சமூக வலைதளத்தில் தமிழக அரசு மற்றும் அமைச்சர் மஸ்தானின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்ட சலவாதியைச் சேர்ந்த சேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், 'விசாரணை நடத்திய பின் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

குச்சி ஐஸ் போட்டோ

ஆரணி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் மஸ்தான், கட்சி துண்டு போட்டிருந்த தொண்டர் ஒருவருக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுத்தது சமூக வலைதளத்தில் பரவியது.அந்த படத்தை மார்பிங் செய்து, அந்த தொண்டருக்கு அமைச்சர் மதுபாட்டில் வழங்குவது போல சித்தரித்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ